திரு.மிஸ்டிக் செல்வம் : நமது ஆன்மீக வழிகாட்டி  [ Mystic Selvam  ]

  தமிழ்நாட்டின் ஆன்மீக வழிகாட்டி மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்கள்

 கி.பி.1937 ஆம் ஆண்டு ராஜபாளையத்தில் சைவ வேளாளர் குடும்பத்தில் பிறந்தவர் திரு.பொ.செல்லப்பா அவர்கள்.பள்ளிப்படப்பிற்குப்பின் 19 ஆம் வயதில் அரசுப்பணியில் சேர்ந்த அவர்,திருச்செந்தூரில் பணிநிமித்தமாக சில காலம் தங்கியிருந்தார்;அப்போது அவருக்கு சில தெய்வீக அனுபவங்கள் ஏற்பட்டன.இதனால், அவருக்கு அசாதாரண தெய்வீக சக்திகள் உண்டாயின.இவருக் மனைவியும் ஒரு மகனும் உண்டு.       

கி.பி.1960 ஆம் ஆண்டு சித்ரா பவுர்ணமியன்று ஐந்தருவி தவத்திரு.சங்கரானந்தாவிடம் அஜபா காயத்ரி உபதேசம் பெற்றார்.பின்னர் ஆன்மீக அன்பர்கள்,யோகிகள்,சாத்திர வல்லுநர்கள்,சித்தர்கள் ஆகியோரின் நட்பையும்,ஆசியையும் பெற்றதுடன்,பயிற்சிகளையும் மேற்கொண்டார்.மேலும் தமிழகம் மற்றும் கேரளாவில் உள்ள பழமையான ஓலைச்சுவடிகள்,நூல்களை முழுமையாகக்கற்று ஆய்வு செய்தார்.குருவின் ஆணைப்படியும்,தாம் பெற்ற பயிற்சிகளாலும் திரு.மிஸ்டிக் செல்வம் அவர்கள் சித்த மார்க்கம்,அஷ்டகர்மம்,அஷ்டாங்க யோகம்,மானசயோகம்,மூலிகை மர்மங்கள்,சூட்சும உலகம்,மந்திர ரகசியம்,கிரக இயக்கங்கள்,பிரபஞ்ச கதிர்வீச்சுக்கள்,ஜோதி வழிபாடு,சூரிய வழிபாடு,மதங்களின் வணக்கமுறை,விஞ்ஞான சைவம் ஆகியவற்றைப் பற்றி முழுமையான ஆராய்ச்சி செய்துள்ளார்.
 40 ஆண்டுகளாக தாம் கண்டறிந்த ஆய்வுகளை கோவை மகரிஷி தயானந்த ஜோதி அவர்களின் ஆசியுடனும்,வழிகாடடுதல்படியும் ஞான சிந்தாமணி,ஜோதிட பூமி,ஜோதிட அரசு,ஸ்ரீவராஹி விஜயம்,பேசும் தெய்வம் போன்ற பத்திரிகைகள் மூலமும் மற்றும் ஆன்மீகக்கருத்தரங�� �குகள் மூலமாகவும் வெளியிட்டு ஆன்மீக விழிப்புணர்வை உண்டாக்கினார்.

திரு.செல்லப்பா அவர்களின் ஆன்மீக ஆராய்ச்சிகளைப் பாராட்டி கி.பி.1996 இல் காகபுஜண்டர் ஆசிரம பாராட்டுக்கூட்டததில் திருவாடுதுறை மகாசன்னிதானம் அவர்களால் “ஆன்மீகச் செல்வம்” எனும் பட்டம் வழங்கப்பட்டது. உலக ஆன்மீக அன்பர்களிடம் தொடர்புகொள்ள இவருடைய பெயரை பின் மிஸ்டிக் செல்வம் என மாற்றப்பட்டது.திரு.மிஸ்டிக் செல்வம் ‘சிவ பராக்கிரமம்’ ‘ஸ்ரீசொர்ணபைரவர் ‘ஆன்மீகத்திறவுகோல்’ என்னும் நூல்களை எழுதியுள்ளார். இவரடைய சொர்ணபைரவர் நூல் மூலம் கவனிப்பாரற்றுக்கடந்த தமிழ்நாடுப்பைரவ சன்னதிகள் விழிப்புணர்வைப் பெற்றன. ‘ஆன்மீகதீபம்’ என்னும் நூலை தொகுத்துவந்தார்.

[  Note:  MysticSelvam Ayya have written books Sri Swarna bhairava, Aanmika Thiravukol, Siva Parakramam about 64 siva , Om Siva Siva Om Manthira and also written 100 of small article about Aanmiga in various weekly & monthly Aanmika book.   Most of Shri Mystic Selvam ayya article are collate ,compiled and  about 200 articles republished in two volumes book “Anmeega Payanam “   .  Now this books are not available in market .]

[
Selvam ayya Brother republished Aanmika thiravukol and Sivaparakramam , but Sri Swarna bhairava on print , He only having all copyright’s. This 2 book avalable in link…. 

Vallalar Book Shop erode- 9894304225 ,0424 4020047
Mathi nilayam books chennai  044 – 28111506

Buy in online  Nammabooks.com 04249 233195 , 97394 99771, 9843931463
Aanmika thiravuko :  https://goo.gl/bCPgdE
Sivaparakramam :  https://goo.gl/uDVgkd

திரு.மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்களின் ஜீவசமாதி தூத்துக்குடி அருகில் இருக்கும் முடிவைத்தானேந்தல் கிராமத்தை அலங்கரிக்கிறது.திரு.ராஜாசுவாமிகள் இதை நேர்த்தியாக பராமரித்துவருகிறார்.இங்கு செல்ல விரும்புவோர்,திருநெல்வேலி டூ தூத்துக்குடி செல்லும் வழியில் வாகைக்குளம் என்ற ஸ்டாப்பில் இறங்கி, முடிவைத்தானேந்தலுக்கு ஆட்டோவில் செல்லலாம்.தினமும் இரவு 7 மணிக்கு திரு.மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்களின் ஜீவசமாதியில் சந்திக்கலாம்.பிரதி பவுர்ணமி தோறும் அன்னதானம் நடைபெற்றுவருகிறது

 

திரு.மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்களின் சகோதரி திருமதி.Dr.விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் ஆவார் [கிராமியப் பாடல்களை பட்டி தொட்டியெங்கும் பரப்பியவர்களில்].இவர்தான் திரு.மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்களின் மதுரை ஆன்மீகப் பயிற்சி வகுப்புக்களை ஆடியோவாகப் பதிந்து விற்பனை செய்து வருகிறார்.

திரு.மிஸ்டிக் செல்வம் அவர்கள் தாம் பெற்ற அனுபவங்களை மதுரையில்

மந்திரப்பிரயோகம்
விபூதிப்பிரயோகம்
ருத்ராட்சப் பிரயோகம்
சங்குப்பிரயோகம்
 அஞ்சனப்பிரயோகம் 

 யந்திரப்பிரயோகம் ,காலதோஷ நிவாரணம்,வாஸ்துதோஷ நிவாரணம்,பிதுர்தோஷ நிவாரணம் என்று பயிற்சி வகுப்புகள் மூலம் தம்மை நாடி வந்த தென்னாட்டு ஆன்மீக அன்பர்களுக்கு பயிற்சி அளித்துவந்துள்ளா� பயிற்சி பெற்றவர்கள் ஏராளம்.இப்பயிற்சி ஆதாயத்திற்காக நடத்தப்பட்டவை அல்ல என்பது அனைவருக்கும் தெரிந்ததே.மதுரை டீன் பிரம்ம ஸ்ரீசித்த வித்யார்த்தி டாக்டர்(கேப்டன்) டி.சக்திவேல் எம்.டி.,கார்டியோ அவர்களின் பரிந்துரையின் பேரில் கல்கத்தா இந்திய மாற்றுமுறை மருத்துவ போர்டு திரு.மிஸ்டிக் செல்வம் அவர்களுக்கு,சிவமண மருத்துவ ஆராய்ச்சிக்காக (ருத்ராட்சதெரபி) டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது.அவரது நீண்டநாள் ஆசையாக பின்வருவன அமைந்திருக்கின்ற:


1.சைவ உணவு மட்டுமே சாப்பிடுவதை ஒரு மரபாக்குதல்

2.உலக சகோதரத்துவத்தை வளர்த்தல்

3.ஆன்மீக நூல்கள் அச்சிட்டு வெளியிடுதல்,ஆன்மீகக்கூட்டங்கள்,கலைநிகழ்ச்சிகள்,ஆன்மீக அறிஞர்களை கவுரவித்தல்,அரிய ஆன்மீக நூல்களை சேகரித்து விஞ்ஞான ரீதியில் பாதுகாத்தல்

4.வயது முதிர்ந்த,கவனிப்பாரற்ற ஆன்மீகப்பெரியோர்களை பராமரித்தல்,மருத்துவ உதவி செய்தல்

5.தேவைப்படும் இடங்களில் இயன்ற அளவு அன்னதானம் செய்தல்

6. “ஓம் சிவசிவ ஓம்” என்ற மந்திரத்தைப் பரப்புதல் 108 times chat : http://www.mediafire.com/?986gcv5h797h41l 

 

 i added Mystic Selvam  Speech …
You can call be any time / Drop mail me.chamundihari@gmail.com


[ all take from Net … ]

Advertisements