சும்மா இரு

எதுவும் செய்யாமல் இரு

எதுவும் செய்யாமல் சும்மாஇரு

உடல் மேல் உள்ள கவனத்தில் சும்மா இரு.

செயல் பாட்டிற்கு இரு இதழ்கள்இரு

செயலற்று சும்மா இரு.

இரண்டுக்கும் நடுவில்சும்மாஇரு.

அது நடத்தட்டும் நீ சும்மா இரு.

முற்றாக திறந்து முழுமையாக சும்மா இரு.
ஆனந்தத்திற்கு பிச்சை இட்டு சும்மா இரு.

ஆனந்தத்திற்கு உன்னை பிச்சை இட்டு சும்மா இரு.

தன்னையே பிச்சை இடுபவன் தரணியிலே சிறந்தவன்.

சுருதியை விட்டகன்று சும்மா இரு.
நிரலின் சொல் கேளாமல் நீ சும்மா இரு.

ம்  என்ற நாதத்தில் எல்லாம் உதிரும்.

ம்  என்கிற சுருதி கூடும் சுருதி பேதம் ஒன்றாய் கூடும்.

கூடினால் ஸ்தம்பனம்.
சுவாசத்தை அகன்று சும்மா இரு.

சுவாசத்தை அகற்றி சும்மா இருப்பதல்ல!

சுவாசம் வாக்கில் சுவாசம் நடக்கட்டும்.

இதுதான் சாவுக்கும் வாழ்வுக்கும் வித்தியாசம்.
உடலில் சும்மா இரு.

உயிரில் சும்மா இரு.

உணர்வில் சும்மா இரு.

மனதில் சும்மா இரு.
கவனத்தில் சும்மா இரு.

இருப்பில் சும்மா இரு.

நினைவில் சும்மா இரு

ஒட்டு மொத்தமாக சும்மா இரு.
நினைவு சும்மா இருந்தால் உணர்வுக்குள் வரலாம்.

உணர்வு சும்மா இருந்தால் அதிர்வுக்கு வரலாம்.

சும்மா இருப்பது உண்மைக்கு பயணம்.

அதிர்வில் சும்மா இருந்தால்

ஆனந்தத்திற்கு வரலாம்.

ஆனந்தத்தில் சும்மா இரு.


இப்போது சும்மா இருக்கிற இடத்துக்கு வழி தெரிகிறதா?
இயக்க விதியை தெரிந்து கொண்டால் இன்னும் சும்மா இருக்கலாம்.

இறுதியில் கதிர்.

கதிர் மேல் மின்வினை மின்காந்தம் மின் காந்த சுழற்சியே உலகு.

கதிருக்கு காந்தம் மின்.

நீ காந்தத்தை விட்டு மின் ஆனால்மின்னிலிருந்து கதிராவாய்.
மின்னை காந்தம் வளர்ந்தால் பொருள்.

எல்லாம் என்றால் சும்மா இருக்கும்கதிர்.

ஒவ்வொன்றும் என்றால் ஒவ்வொன்றும் துள்ளுகிறது.
கதிர் ஒன்று

மின் காந்தம் இரண்டு

மின் காந்தம் மின்காந்தம் மூன்று


கதிர் நியூட்ரான் மின் புரோட்டான் காந்தம் எலக்ட்ரான்.

கதிர் ஒன்று மின்காந்தம் இரண்டு மூண்டு இணைவது மூன்று இதுதான் இயக்கம்.

இயக்கத்தை அறிந்தவன் எதில் வேண்டுமானாலும் இருக்கலாம்
சும்மா இரு.
அறிந்தால் அடங்கி சும்மா  இரு. 

கதிராகி கலந்து சும்மா  இரு. 

தீயில் தெரியும். 

சொல் டலில் நீந்துகிறது தமிழ். 
சும்மா இரு. 
இரண்டு தொனி. 

தமிழ் ஓர் தாவரத்தில் முழுமையாக வளர்ந்து நிற்கிறது. 

தாவரத்தின் வழியாகவும் வருகிறார்கள் மூலிகை மணிகள். 

தமிழ் தன்னை திறந்து காட்டும். 
சும்மா இரு இரண்டு தொனி 

சும்மா இரு வெளியே சும்மா இரு உள்ளே 

உன் வெளியே தொனி 

தொனியை கண்டு பிடிப்பவன் தொழிலை கண்டு கொள்வான். 
எல்லாம் அறிந்தாலும் சும்மா இரு. 

அறிவை தேடாதே சும்மா இரு. 

அறிகிறதா? 
கூடினால் சும்மாஇருப்பேன். 

கூடாவிட்டால் விட்டு விடு. 

ஏதாவது ஒரு பக்கம் என்றால் 

எதோ ஓரளவுக்கு நிம்மதி. 
ஒன்றானால் பக்கமே இல்லை. 

ஒன்றானால் எந்த பக்கமும் இல்லை. 

தொனி தான் நிரல். 

தொனி நிரலை அமைக்கும். 
என் பக்கம் எல்லாம் என் பக்கம். 

தீ சுடர். 

நீ சுடருக்குள் வந்த விதம் தெரிகிறதா? 

உள்ளே சென்றால் ஒரு விளக்கம். 

வெளியே என்றால் பல விளக்கம். 
உள் விளக்கம் வெளி விளக்கம் 

இரண்டும் ஒரே விளக்கம் தான். 

எலக்ட்ரான் என்றால் வெளி விளக்கம் 

புரோட்டான் என்றால் உள் விளக்கம் 

நியூட்ரான் என்றால் ஒரே விளக்கம் 


விளக்கம் விளக்கமாக விளங்கியதா? 

இதுதான் ஒரே விளக்கம். 


நீ விளக்கத்திற்குள் வந்த விளக்கம் புரிகிறதா?

அசைந்தால் இரண்டு தமிழை இப்படி பரிமாறு.
அங்கேயும் இணைப்பா? 

இரண்டிருந்தால் இணையவேண்டும் என்பது விதி.
ஒன்றையே ஒன்று எவ்வளவு நேரம் பார்க்கும்? 

ஒன்றையே ஒன்று ஒறுத்தால் 

பிறப்பித்து ஓடி விளையாடும் விளையாட்டு. 

ஒன்றையும் தெரிந்து கொண்டாய் ஒவ்வொன்றையும் தெரிந்து கொண்டாய்
இங்கே வந்து சும்மா இரு. 

நீ சும்மா இருந்தால் 

ஒவ்வொன்றும் சும்மா இருக்கும். 

சும்மா தான் விளையாட்டில்லை. 
சும்மாதான் வினையில்லை 

சும்மாதான் விளையாட்டுக்கு 

சும்மாதான் வந்தேன் 

சரி சும்மா இரு. 
சும்மா இரண்டு தொனி. 

தொனியில் போட்டால் சும்மா விரியும். 

சும்மா கிடப்ப சுப்பரமணி. 


சுடராக வந்த சுப்பரமணியை தெரிகிறதா? 

சுப்பிரமணியை கண்டவன் சுகமாக இருந்து கொண்டான். 

சோம்பேறிகளே எழுந்திருங்கள் 

சுப்பரமணி இருக்கும் இடம் மூல மின்காந்தம்.


கொஞ்சம் மயக்கம் அதிகம் தான். 

மூல மின்காந்தத்தை முற்றாக உடை. 

உடை படுகிற வரை உள்ளே போ! 

உள்ளே போனால் இருந்து கொள்ளலாம். 
சும்மா இருப்பது உள் பயணம். 

சொரிந்து விட்டால் ஒரே நமைச்சல்.

இங்கே வந்து சும்மா இரு. 

சும்மா இருக்க சும்மா இருக்க சொர்க்கம். 
நீ அசைந்தால் அகிலமே அசையும் கவனி. 

அசையாமல் இங்கேயும் சும்மா இரு. 

சும்மா இருக்க கற்றுக் கொள். 

கற்றுக் கொள்ள கற்றுக் கொள்ள காரணம் புரியும். 
உள்ளே இங்கு கொண்டுவந்து விட்டு விட்டேன்.

பாதையை கண்டு கொண்டே பயணத்தை தொடங்கு. 

மீண்டும் சொல்கிறேன் சும்மா இருப்பதே சுகமான பயணம். 

பாதையை கண்டு கொண்டே பயணத்தை தொடங்கு. 
பல பேர் வருவார்கள். 

பல பேரும் வந்து போகும் இடம்.

இப்போது நீ எது சொன்னாலும் பிறக்கும். 

இங்கேயும் வந்து விட்டாய்.
விபரமான ஆள்தான் நீ. 

இங்கிருந்துதான் தாவோவும் உபநிஷத்தும் வந்தது. 

எது எங்கே போனாலும் 

அது தமிழுக்கு வந்தே முடியும். 
மொழியால் சொன்னால் தமிழ் வரும். 

இவன் தன்னை அறிந்து முடிந்தான். 

தான் முடியும் இடத்தில் தமிழ் இருக்கும். 

இங்கேயும் வந்து விட்டாய்.
சற்று அகண்டு நில்.

தமிழி நின்றால் அகண்டு கொடுக்கும். 

இனி பேச்சே இல்லை சும்மா இரு. 

தமிழுக்கு உள்ளே போனால் தமிழ் வெளி. 
வெளிக்கு வெளியே பெரிய தமிழ்.

உள்ளேயும் வேண்டாம் வெளியேயும் வேண்டாம் ஓரிடத்தில் சும்மா இரு.

எல்லாம் ஒரே நிரல். 

தமிழுக்கே நிரல் சொன்னான் சுந்தரம் இங்கே வந்து பார். 
இங்கே நிரலிலே நிஜமானவன் 

ஒருவனும் அவன்தான் ஒவ்வொருவனும் அவன்தான். 

அங்கே என்றால் அலைச்சல் இங்கே என்றால் சுகம். 

சுகத்துக்குள் பூரண சுகம். 
அதற்கும் உள்ளே பரிபூரண சுகம்.

சுகத்தை கெடுத்துக் கொள்வது தொன தொன

தொன தொன வென பேசாதே! 

பேசாமல் சும்மா இரு. 
பேச்சால் வளர்ந்தது கதை. 

எல்லாம் ஒரு நிரல். 

ஒவ்வொரு நிரலின் உள்ளுக்கு ஒவ்வொரு நிரலாய் தொடரும். 

நிரலின் வெளியே விரிவு. 
ஒரே நிரலுக்குள் வந்து விட்டோம் சும்மா இரு.

உன் பேச்சை கேட்பவன் உன் நிரலுக்கு வருகிறான்.

ஹிப்னாடிசம்.

இங்கே பல வித கலைகள். 
இருக்கட்டும் நீ சும்மா இரு.

சும்மா இருக்க சும்மா இருக்க 

ஒவ்வொரு உலகாய் விரியும்.

சும்மா இருப்பவன் அனைத்தையும் அறிவான். 
சும்மா இருக்கிற அறிவில் தான் எல்லா விபரமும் விளங்கும்.

உள்ளே இறங்கலாம் மேலேறி வரலாம் 

தமிழுக்கு உள்ளே எதுவும் இல்லை. 

தமிழுக்கு வெளியேயும் எதுவும் இல்லை. 
தமிழ் நிரலுக்கு வந்து விட்டாய்தெரிகிறதா? 

உன் எல்லா உறவினர்களும் இங்கே இருக்கிறார்கள் பார்த்துக்கொள். 

கதை முடிந்தவன் கதை முடியாதவன் எல்லாம் இங்கேதான் இருக்கிறார்கள். 

சும்மா இரு. 
நீ எவ்வளவு நேரம் சும்மா இருக்கிறாயோ அவ்வளவு பெரிய கதவு திறக்கும். 

உன்னையே திறக்க உள்ளே சும்மா இரு. 

இருவரும் இணை பிரிய இடம் வந்து விட்டது. 

நீ உன் உள்ளே போ!

நான் என் உள்ளே போகிறேன். 
உறவு விடுமா? 

நினைத்துப் பார்த்தால் நினைவு நிம்மதியானால் இல்லை. 

நிம்மதி வேண்டுமானால் சும்மா இரு. 

விபரம் வேண்டுமானால் வெளியே போ! 

வெளி விபரம் ஒரு வெங்காயத்திற்கும் ஆகாது 

இருந்தால் உள்ளே இல்லையென்றால் வெளியே 

என் தொனியை அமைப்பதும் ஓர் நிரல். 

எல்லாம் ஒரே நிரல்தான். 
இடத்துக்கு தக்கபடிகாட்சி அளிக்கிறது. 

நிரலானால் அம்மா நிரலற்றால் சும்மா சும்மா இரு.

நிரலற்று சும்மா இரு. 

நிரலற்றவன் நிரந்தரன். 
இங்கே அடுத்தவன் வீட்டை எட்டிப் பார்ப்பது கள்ளத்தனம்.

எவனோ எதிரி இன்னும் இருக்கிறான். 

எதிரிக்கு பயந்தவன் இருந்துகொண்டு இருப்பான். 

உன் சாவு பயம்தான் உன் ஒரே எதிரி.
சாவால் பயத்தை தான் உருவாக்க முடியும்.

தமிழ் உயிரையே தரும்.

இது என் தமிழ். 

உன்தமிழை நீ சொல். 
ஒரு சுற்று வந்து விட்டோம். 

அறிவில்லாதவனுக்கு எவ்வளவு சொன்னாலும் விடியாது. 

நீ ஏன் அப்படி இருக்கிறாய்? நான் ஏன் இப்படி இருக்கிறேன்?நன்றாக இருக்கிறதா? 

உனக்கு தேவைப் பட்டால் நீயே சும்மா இருப்பாய்.
சும்மா இரு. சுகப்பட வேண்டுமென்றால் சும்மா இரு. 

சும்மா இருக்க சும்மா இருக்க சொக்கம் விரியும். 

சொர்க்கமும் நரகமும் சொந்தக்காரகள் தான். 

இங்கே ஒரு நிரல் நீள்கிறது.
சும்மா இருந்தால் எல்லாம் தெரியும். 

பழையதை எல்லாம் மறந்தவனுக்கு பரஞ்சோதியாக தெரியும். 

பரஞ்சோதி பரிபூரண பரஞ்சோதி 

பரஞ்சோதிகள்எல்லாம் ஓர் நிரல். 
பூரண பரஞ்சோதியானவன் ஒருவன் இவன் இருக்கிறான். 

பரஞ்சோதியை சொன்னவன் எல்லாம் பரஞ்சோதி ஆகிவிட்டான்.

அது கொஞ்சம் வெப்பமான நிரல்.

அதில் அருட்பெருஞ்சோதி ஆனவன் வள்ளலார்.
அதை அவர் வெளியே கேட்டு வாங்கினார்.

தனக்கு வெளியே கேட்டு வாங்கினார்.

நம்புவது ஒரு பழக்கம். 

இன்னொன்றை நம்புகிற இடத்தில் அத்வைதம் இல்லை. 
இது ஆதி சங்கரனுக்கே வெளிச்சம். 

அவன் தமிழ் நிரலை சொல்ல விருப்பப் பட்டவன். 

தமிழ் நிரல் என்பது தானே அறிவது. 

ஒன்றை இருந்ததை இரண்டு பார்த்தது.
இது தான் அவர் சொன்ன அத்வைதம். 

இரண்டாக இருப்பதைத்தான் இதுவரை பார்த்து வந்தோம். 

பழையதை எடுத்து புதியதை கட்டு. 

இரண்டிலிருந்து தொடக்கம் இந்தப் பக்கம். 
இதற்கு காரணம் அந்தப் பக்கம்.

சும்மா இருப்பது ஒரே பக்கம். 

சும்மா இருப்பது ஒரு பக்கம்.

சும்மா இருப்பது ஒரு பக்கம் 

சுகமாக இருப்பது ஒரு பக்கம். 
சுறு சுறுப்பாக இருப்பது ஒரு பக்கம். 

நியூட்ரான் புரோட்டான் எலக்ட்ரான் 

மூன்று முகம் தெரிகிறதா? 

இங்கே வந்து சும்மா இரு. 
கதிர் ஆவாய். 

நீ மூன்றையும் கடந்து வந்தவிதம் தெரிகிறதா? 

கதிரிலே சும்மா இருந்தால் கடவுள் ஆவான். 

தானே இல்லாமல் தன்னை சுற்றி காண்கிற வித்தை. 
பார்ப்பவனையும் விட்டு விட்டு பார்.

தேகம் விளித்து பார்.

சும்மா இருக்க சும்மா இருக்க அகத்துக்குள் விரியும் 

அறிவு அகத்துக்குள் விரியும். 
விழித்து விட்டால் தூக்கம் இல்லை.

வெளியே நேரம் அப்படி. 

அடுத்தவனிடம் கையை விட்டு அலம்பாதே! 

இங்கே வந்தும் நாகரிகம் இல்லை. 
என்ன புரிகிறது என பார்க்காதே 

எப்படி புரிகிறது என பார்.

நான் சொல்வது இனி உனக்கு புரியாது. 

சும்மா இருந்தால் தூரத்தையும் கடக்கலாம். 
எல்லா அறிவும் அறிவதற்கே கொண்டு விடும். 

அறிவதை அறிய சும்மா இரு. 

அங்கேயே நிலைப்பாய் கதிரானால் நிலைக்கும். 

நிலையாய் நிற்க நினைப்பவனுக்கு வாழ்க்கை.
எதற்கு நிலையான வாழ்க்கை? 

நிலையான வாழ்க்கை பெற்றவர் நிறைய பேர் இருக்கிறார்கள். 

நிலையான வாழ்க்கையை அறிந்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். 

சும்மா இருப்பவன் சுடு காட்டில் இருந்தால் என்ன?

சொந்த கடையில் இருந்தால் என்ன?
சும்மா இருப்பதற்கென இடமில்லை. 

இடம் பொருள் காலம் வெளி எல்லாம் இங்கில்லை. 

ஒன்றுமில்லாதது சும்மா கிடக்கிறது. 

நிரலையே எரித்து நேராகிறேன் நான். 
இணைப்பிலே இருக்கிற இடத்தை பொறுத்து நிரல். 

நிலை எல்லாம் நிறைந்த ஒரே நிரல். 

நிரல் எல்லாம் நிறைந்த ஒரே நிரல்.

நிரல் எல்லாம் இணைந்த ஒரே நிரல். 
இணையுமிடம் இடைவெளி. 

இடைவெளியில் இருந்து வினைபடும் ஒவ்வொரு நிரலும் ஓர் மரபு. 

நிரல் இணைந்தால் அங்கே ஓர் மரபு. 

நிரல் அம்மா நிஜம் அப்பா. 
நிரலும் நிஜம்தான். 

நிஜத்துக்கு நிரல் இல்லை. 

நிஜம் நிரல் நிரலும்நிஜம். 
தாய் வழி உறவு பலமான வலிமை. 

நானோ ஒரு பங்காளி கூட்டம். 

அடுத்திருப்பவள் அத்தை. 
மறைந்து நடத்துபவன் மாமன். 

சிவன் பங்காளி பெருமாள் மாமன். 

எந்தப் பக்கம் சாய்கிறதோ அந்தப் பக்கம் விளக்கம். 
சாயாமல் சும்மா இரு. 

காரணமே இரண்டாக இருக்கிறது. 

எதற்குமே ஒரு காரணமட்டும் இல்லை. 

ஒன்றானால் ஒரு காரணமுமில்லை.
அடுத்தவன் தலை விதியை நிர்ணயிப்பவன் அம்போ என்று போவான். 

நான் வந்த வழி இது உனக்கு தேவை என்றால் 

நீயே சும்மா இருந்து பார்த்துக் கொள். 
உன் சௌகரியத்துக்கு. 

வரட்டுமா?By..RRS.Sundaram ayya..

https://www.facebook.com/rrs.sundaram/about

http://www.blogger.com/profile/12443129600285553817

Advertisements