அன்புடையீர்
    நாம் கண், காது, மூக்கு, நாக்கு, தோல் முலம் பார்த்தல் ,கேட்டல், வாசனை சுவை மற்றும்  உணர்வு முதலியவற்றை அறிந்து கொல்கிறோம் . எந்த 5 குதிரைகள் கட்டிய வண்டியில் பயணித்து கொண்டுள்ளோம். இந்த குதிரைகளை அடக்காமல் அதன் கயிறுகளை அவிழ்த்து விட்டுவிடுங்கள் . பின்னர் வண்டி என்கிற மனம் அசையாமல் ஆராயாமல்  சும்மா நின்றுவிடும் . சும்மா இருக்கும் , இது ஒரு எளிய வழி சும்மா இருப்பதற்கு….
       சும்மா ஆராயிச்சி அற்று இருந்தால் ஒருமை நிலை ஏற்படும் . மற்றும் ஒன்று என்று இல்லது போனால் மரண  பயம் அற்று போகும் . முழு திருப்தி நிலை வந்துவிடும் . அறிவு முழுமை அடையும் . தேடுதல் அற்று முழுமை அடைந்தால் இந்த உடம்பு தானே மறைந்து விடும். எனவே ஆராய்ச்சி அற்று சும்மா இருப்பதே சுகம் .
        இதை தேடுகிறேன் அதை தேடுகிறேன் ஆன்மீகத்தை தேடுகின்றேன் இறைவனை தேடுகின்றேன் என்னை தேடுகின்றேன் என்ற எந்த தேடுதலும் இல்லாமல் சும்மா இருந்தால் சுகம் . தானே தானாய் தானே எல்லம்மாய் தானே தானாய் ஆவது  ஆகும் .

       இந்த உலகம் முழுவதிலும் நீங்கள் மட்டும் இருப்பதாக வைத்துக்கொள்ளுங்கள். அந்த நிலையிலேயே பழகுங்கள் யார் தன்னிடம் வந்தாலும் அது தானே என்று எண்ணி நடந்து கொள்ளுங்கள் பிறகு என்ன நடக்கிறது என்று அனுபவித்து தெரிந்து கொள்ளுங்கள்.


……உயிர். 

TRY TO BE IN SUMMA IRU STATE BY SURRENDERING OUR-SELF TO THE SUTHASIVAM AND PRAY SUTHASIVAM TO TAKEOVER OUR-SELF TO GIVE DEATHLESS LIFE.


Thank to: Dr Dheena Dayalan : http://suthasivam.blogspot.com/

Advertisements