பயம்

அன்புடையீர் 

                        உலகத்திலே பயம் என்ற ஒன்று நம் எல்லாரிடத்திலும் எல்லா நேரங்களிலும் உள்ளது . உதாரணமாக இவனால் என்ன வம்பு வருமோ …,இதை சாபிட்டால் அந்த நோய் வருமோ …, மகன் பள்ளிக்கு போனானே போய் சேர்ந்தானோ … இப்படி எப்போதும் இதை கண்டால் பயம் அதை கண்டால் பயம் என்று  பயந்து கொண்டே இருக்கிறோம் . பயத்தில் பெரிய பயம் மரண பயம். ஒருவன் தன்னை பயத்தில் இருந்து காத்து கொள்ள கடவுளை நாடுகிறான் . கடவுளை அதிகம் வேண்டுபவர் அதிகம் பயந்தவராவர் . கடவுள் அதிகமான சக்தி வாய்ந்தவர் பயம் அவரிடம் ஒன்றும் செய்ய முடியாது என்று ஆழ் மனதில் நம்பிக்கை உடையவராக இருப்பார் .
                    பிரபஞ்சமே இறைவனாக ஆன்மாவாக இருப்பதை அறிந்துவிட்டால் பிரபஞ்சத்தில் உள்ளவை அனைத்தும் இறைவன் என்று புரிந்துவிடும்.அவ்வாறு தெளிந்துவிட்டால் இன்பம் துன்பம் இரண்டுமே இறைவன் என்று தெரிந்துவிடும் . இன்பம் துன்பம் என்ற முகமூடியை கொண்டு நம்மை ஏமாற்றுகிறான் என்பது புரிந்துவிடும் . இதனால் மனதில் பயம் என்னும் சலனம் கொஞ்சம் கொஞ்சமாக தெளிந்து சலனமற்ற நிலைக்கு வந்துவிடும்.
                  இனி கடவுளை வேண்டுவது குறைந்து விடும் . கடைசியில் வேண்டுவது நின்றே போய்விடும் . கடவுள் நம்மை காப்பவர் கருணையே வடிவானவர் அவரால் நாம் நஷ்டமடையோம் என்ற உண்மை தெரிந்தவுடன் வேண்டுதல் இல்லாமல் போய்விடும் . எல்லா நிகழ்வுகளும் நன்மைக்கே என்ற தெளிவு ஏற்படும் . எல்லாம் பகவான் என்று தெளிந்தவுடன் மன சலனம் முழுமையாய் மறைந்துவிடும் .பயம் அகன்றுவிடும் . கடைசியாக மரண பயமும் அகன்று போகும் .
                மரணத்தை கொண்டுவரும் நோய் ,விபத்து ,மூப்பு போன்ற எல்லாமே பிரபஞ்ச பொருள்கள் தான் . பிரபஞ்சம் என்பது இறைவனாகும் . இறைவனால் துன்பம்  எதுவும் வராது என்ற தெளிவு வந்துவிட்டால் , சலன மற்ற  நிலைக்கு வந்துவிட்டால் ,எண்ணம் அற்ற நிற்குண நிலை வந்துவிட்டால் , மரண பயத்தை கடந்து  விட்டால் மரணமில்லா பெறு வாழ்வை அடையலாம் .

           ஆகையால் பயமற்ற ,எண்ணம் அற்ற, நிற்குணத்தில் சலனமில்லாமல் சும்மா இருக்க பழகுவோம் .

……உயிர். 

TRY TO BE IN SUMMA IRU STATE BY SURRENDERING OURSELF TO THE SUTHASIVAM AND PRAY SUTHASIVAM TO TAKEOVER OURSELF TO GIVE DEATHLESS LIFE.


Thank to: Dr Dheena Dayalan : http://suthasivam.blogspot.com/

Advertisements