சமயகுரவர் நால்வர் 
சந்தானகுரவர் நால்வர்

சமயகுரவர் & சந்தான குரவர் வேறுபாடுகள் : ஒரு பார்வை

சைவத்தில், சமயகுரவர் சந்தானகுரவர் என ஆசாரியர் இருவகையர். ஒவ்வொரு வகையிலும் நால்வர். சமயகுரவரும் நால்வர். சந்தானகுரவரும் நால்வர்.

சமயகுரவர் நால்வர்
1. திருஞானசம்பந்தர் 
2. திருநாவுக்கரசர் (அப்பர்)
3. சுந்தரமூர்த்திகள்
4. மாணிக்கவாசகர் 


சந்தானகுரவர் நால்வர்
1. மெய்கண்டார்
2. அருணந்திசிவம்
3. மறைஞானசம்பந்தர்
4. உமாபதிசிவம்

•சமயகுரவர் நால்வரும் ஒருவருக்கொருவர் சீடர் அல்ல.
நால்வரும் தனித்தனி ஆசாரியர்கள்.

•சந்தான குரவர் நால்வரும் ஒரவருக்கொருவர் சீடர்

• சமயகுரவர்கள் தோத்திரங்களை அருளினார்கள்.

•சந்தான குரவர்கள் சாத்திரங்களைச் செய்தார்கள்

• சமயகுரவர்களால் திருமுறைகள் தோன்றின.

•சந்தானகுரவர்களால் சித்தாந்த சாத்திரங்கள் தோன்றின.

• சமயகுரவர்களால் கோயில்கள் விளக்கம் பெற்றன.

•சந்தானகுரவர்களால் மடங்கள் உண்டாயின

•சமயகுரவர்கள் கோயில் கோயிலாக நாடெங்கும் சென்று பாடினார்கள்.

•சந்தானகுரவர்கள் மடங்களில் இருந்துகொண்டு பாடஞ்சொன்னார்கள்

•சமயகுரவர்கள் பாடியருளிய திருமுறைகள் இன்றும் திருக்கோயில்களில் இறைவன் திருமுன்னர் வழிபாட்டுக் காலங்களில் ஒதப்பெறுகின்றன

•சந்தானகுரவர்கள் செய்தருளிய சாத்திரங்கள் மடங்களில் பாடங்சொல்லப்பெறுகின்றன.

•சமயகுரவர்கள் கோயில்களில் வழிபடப்பெறுகிறார்கள்

•சந்தானகுரவர்கள் மடங்களில் வழிபடப்பெறுகிறார்கள்

•சயமகுரவர் திருவுருவங்கள் நின்றகோலத்தில் விளங்கும்.

•சந்தானகுரவர் திருவுருவங்கள் அமர்ந்தகோலத்தில் விளங்கும்..

thank fb friend: 

Ankhamuthu Kumar
Advertisements