Thank : http://astroranjithbabu.in/சுப முஹூர்த்தம்

Image result for பிரம்ம முஹூர்த்தம்

சுப முஹூர்த்தம்

பலமுஹூர்த்தங்கள் இருப்பினும் அவற்றில் முக்கியமாக:

1. பிரம்ம முஹூர்த்தம்

2. அபிஜித் முஹூர்த்தம்

3. கோதுளி முஹூர்த்தம் ஆகிய மூன்றும் சிறப்பு வாய்ந்தவை.

பிரம்ம முஹூர்த்தம் பற்றி திரு சபரி பஞ்சாங்க கணிதர் அவர்களின்  கருத்துப்படி:

பிரம்ம முஹூர்த்தம் பற்றிய விபரங்கள் மூல நூல்களில் இருந்ததற்கான ஆதாரங்கள்

பதினெண் புராணங்களில் ஒன்றான சிவபுராணத்தில் ருத்ரசம்ஹிதையின் சிருஷ்டி காண்டம் 11 மற்றும் 13 வது அத்தியாயங்களில் பிரம்ம முகூர்த்தத்தின் சிறப்பைப் பற்றி சிலாகித்துச் சொல்லப்பட்டுள்ளது.

ஸ்ரீமத் பாகவதம் 3:20:46 ல் பிரம்மமுகூர்த்தத்தைப் பற்றி எடுத்துரைத்திருக்கிறது. ரிக்வேதத்திலும் முகூர்த்தம் பற்றிய விளக்கங்கள் சொல்லப்பட்டிருக்கிறது. வேதத்தில் சொல்லப்பட்டுள்ள ஸ்லோகங்களுக்கு வியாக்யானம் அதாவது உரையும் விளக்கமும் சொல்லும் நூலுக்கு பிராஹ்மனம் என்று பெயர். அவற்றுள் குறிப்பிடத்தக்கவை தைத்ரீய பிராஹ்மனம் மற்றும் சதபாத பிராஹ்மனம் ஆகியவை ஆகும்.

இதில் தைத்ரீய பிராஹ்மனத்தில் மூன்றாம் பாகத்தில் 10:1:1 லும், சதபாத பிராஹ்மனத்தில் X 4-2-18.25-27; 3,20; XII 3,2,5 மற்றும் X 4,4,4 லும் பிரம்மமுகூர்த்தம் பற்றி சொல்லப்பட்டுள்ளது. கர்கசம்ஹிதையில் 4:8:19, 4:18:14, 5:15:2, 8:10:7 ஆகிய ஸ்லோகங்களில் பிரம்ம முகூர்த்தம் பற்றியும் அதன் சிறப்பையும் எடுத்துச் சொல்லப்பட்டுள்ளது.

மேலே குறிப்பிட்டுள்ள தைத்ரீய பிராஹ்மனம் மற்றும் சதபாத பிராஹ்மனம் ஆகியவற்றில் மேற்குறிப்பிட்டுள்ள ஸ்லோகங்களில் ஒரு அஹோராத்ரத்தை அதாவது பகலும் இரவும் சேர்ந்த ஒரு நாளை முப்பது சம பாகங்களாகப் பிரிக்க வேண்டும் எனவும் அவ்வாறு பிரிக்க வரும் இரண்டு நாழிகைக் காலம்(48 நிமிடம்) ஒரு முஹூர்த்தம் எனவும் குறிப்பிட்டுள்ளதோடு அவற்றின் பெயர்களையும் சொல்லியுள்ளது.

மேலே சொல்லியுள்ளவற்றில் 29வதாகச் சொல்லப்பட்டிருப்பதுதான் பிரம்மமுகூர்த்தமாகும். இவற்றுள் 26வது முஹூர்த்தமான ஜீவ/அம்ருத முஹூர்த்தம் மற்றும் 29வது முஹூர்த்தமான ப்ரம்ம முஹூர்த்தம் ஆகியவை இறைவழிபாடு மற்றும் திருமண வைபவங்களுக்கு மிகவும் சிறப்பான முஹூர்த்தங்களாகும்.

1. ருத்ர முஹுர்த்தம்—————06.00AM – 06.48AM

2. ஆஹி முஹுர்த்தம்——— 06.48am –07.36am

3. மித்ர முஹுர்த்தம்——————- 07.36am – 08.24am

4. பித்ரு முஹுர்த்தம்—————– 08.24am – 09.12am

5. வசு முஹுர்த்தம்——————– 09.12am – 10.00am

6. வராஹ முஹுர்த்தம்————- 10.00am – 10.48am

7.விச்வேதேவாமுஹுர்த்தம்—- 10.48am – 11.36am

8.விதி முஹுர்த்தம்——————- 11.36am – 12.24pm

9. சுதாமுகீ முஹுர்த்தம்———— 12.24pm – 01.12pm

10. புருஹூத முஹுர்த்தம்———- 01.12pm – 02.00pm

11. வாஹிநீ முஹுர்த்தம்———— 02.00pm – 02.48pm

12.நக்தனகரா முஹுர்த்தம்—— 02.48pm – 03.36pm

13. வருண முஹுர்த்தம்————– 03.36pm – 04.24pm

14. அர்யமன் முஹுர்த்தம்———- 04.24pm – 05.12pm

15.பக முஹுர்த்தம்——————— 05.12pm – 06.00pm

16. கிரீச முஹுர்த்தம்—————– 06.00pm – 06.48pm

17. அஜபாத முஹுர்த்தம்———— 06.48pm – 07.36pm

18.அஹிர்புத்ன்ய முஹுர்த்தம் 07.36pm – 08.24pm

19.புஷ்ய முஹுர்த்தம்————– 08.24pm – 09.12pm

20.அச்விநீ முஹுர்த்தம்———— 09.12pm – 10.00pm

21.யம முஹுர்த்தம்—————— 10.00pm – 10.48pm

22.அக்னி முஹுர்த்தம்————- 10.48pm – 11.36pm

23.விதாத்ரு முஹுர்த்தம்——– 11.36pm – 12.24am

24.கண்ட முஹுர்த்தம்————- 12.24am – 01.12am

25.அதிதி முஹுர்த்தம்————– 01.12am – 02.00am

26.ஜீவ/அம்ருத முஹுர்த்தம்— 02.00am – 02.48am

27.விஷ்ணு முஹுர்த்தம்———— 02.48am – 03.36am

28.த்யுமத்கத்யுதி முஹுர்த்தம்– 03.36am – 04.24am

29.பிரம்ம முஹுர்த்தம்————— 04.24am – 05.12am

30.சமுத்ரம் முஹுர்த்தம்———— 05.12am – 06.00am

பதினெண் புராணங்களில் ஒன்றான சிவபுராணத்தில் ருத்ரசம்ஹிதையின் சிருஷ்டி காண்டம் 11 மற்றும் 13 வது அத்தியாயங்களில் பிரம்ம முகூர்த்தத்தின் சிறப்பைப் பற்றி சிலாகித்துச் சொல்லப்பட்டுள்ளது

Advertisements